Show all

சுப்பிரமணியன் சுவாமி ISIS மற்றும் விடுதலை புலிகள் தொடர்பாக ட்விட்டரில் தேவையில்லாத சர்ச்சை

இறுதியாக நமது அரசு, ஐ.எஸ்.ஐ.எஸ் செயல்பாடுகளை கவனத்தில் கொள்ள ஆரம்பித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை இந்தியாவில் இருந்து கிள்ளி எறிய வேண்டுமானால், ஜம்மு காஷ்மீர் மற்றும் தமிழகத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டியது அவசியம். அமெரிக்கா, இஸ்ரேலுடன் இந்தியா இணைந்து இதை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதற்கு 'தமிழகம் அமைதியை விரும்பும் மாநிலம். அதற்கு ஏன் குடியரசு தலைவர் ஆட்சி அவசியம்' என்று ஒரு டுவிட்டர் பாலோவர் கேட்டதற்கு,

சுப்பிரமணியன் சுவாமி "இல்லை. தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் வேரூன்றிவிட்டது. எல்டிடிஇ அமைப்பில் இருந்தவர்கள் ஆதரவு இதற்கு உள்ளது" என்று பதில் அளித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.