Show all

ஒரு லட்சம் பேர் வேலையை விட்டு ஓட்டம்

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களான இன்போசிஸ், டி.சி.எஸ். மற்றும் விப்ரோ ஆகியவற்றிலிருந்து ஒரு லட்சம் பேர் வேலையைவிட்டு போய்விட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த நான்கு காலாண்டில் இந்திய மென்பொருள் நிறுனங்களிலிருந்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்றவர்கள் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் டி.சி.எஸ்., இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலையைவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இது மொத்த பணியாளர்களில் 19 முதல் 20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மென்பொருள் நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.

இதற்கு முக்கிய காரணமாக கிளவுட் கம்ப்யூட்டிங், ஆட்டோமேஷன் போன்ற புதிய தொழில்நுட்பத் துறைகளை நாடி செல்வதும், மற்ற நிறுவனங்கள் அதிக சம்பளம் மற்றும் வசதிகளை தருவதும் தான் என்று சொல்லப்பட்டாலும், கடுமையான பணிச்சுமைதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.