Show all

வரலாறுகாணாத தீர்ப்பை வழங்குமா உச்சஅறங்கூற்றுமன்றம்! 1765 சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனி நபர்கள், பல்வேறு சமூக ஆர்வ அமைப்புகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

இப்போதும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. ஆனால் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்தால் மட்டுமே தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் பல முதன்மையான அரசியல்வாதிகள் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மொத்தமாக சட்டமன்றம், நாடளுமன்றம் என்று சேர்த்து இந்தியா முழுக்க 4896 சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 36 விழுக்காடு அதாவது 1765 பேர் குற்றவழக்குகளில் சிக்கி இருக்கிறார்கள். மொத்தமாக இவர்களுக்கு எதிராக 3045 வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றன. இதில் உத்தர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. 

இந்த நிலையில் இந்த மனுவில் கோரிக்கை வைத்து இருப்பது போல சட்டம் மாற்றப்பட்டால், இந்த 1765 சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் இவர்கள் தேர்தலிலும் போட்டியிட முடியாது. இவர்களின் மொத்த எதிர்காலமும் இந்த வழக்கின் தீர்ப்பில்தான் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. உச்சஅறங்கூற்றுமன்றத்தில் 5 அறங்கூற்றுவர்களின் அமர்வு இந்த தீர்பபை வழங்க உள்ளது. தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதற்கு முன் அளிக்க இருக்கும் மிக தலையாயத்துவமான தீர்ப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,921.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.