Show all

விக்ரம்! கமல் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை குவித்த படம் என்று பேசப்படுகிறது

கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 21 கோடி ரூபாய் அளவுக்கு விக்ரம் படம் முதல் நாளில் திரட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

21,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கமலின் நடிப்பில் உருவான படங்களிலேயே அதிக வசூலை விக்ரம் படம் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தத் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கமலின் விக்ரம் நேற்று வெளியாகி பேரளவான வரவேற்பை பெற்று வருகிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நேற்று தமிழ்நாடு முழுவதும் அதிகாலை 4 மணிக்கான சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றும் நாளையும் சிறப்பு காட்சிகளை வழங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், வசூல் தாறுமாறாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் படத்தில் பல திருப்பங்கள், தரவுகள், உணர்ச்சிகள், அன்பியல் என அத்தனையையும், மிக நேர்த்தியாக கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அண்மை ஆண்டுகளில் கமலை இந்த அளவுக்கு ஒரு இயக்குனரால் பயன்படுத்த முடியுமா அல்லது அவருக்கு இதுபோன்ற ஒரு அழுத்தமான வேடத்தை வழங்க முடியுமா என்ற வியப்பில் கமலின் கொண்டாடிகள் உள்ளார்கள்.

இந்நிலையில் கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 21 கோடி ரூபாய் அளவுக்கு விக்ரம் படம் முதல் நாளில் திரட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில கிழமைகளும் விக்ரம் படம் திரையரங்குகளில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மிக அதிகமான வசூலை விக்ரம் எட்டும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

படம் வெளியாவதற்கு முன்பாக அதற்கு மிக அதிகமான பொருட் செலவில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதனால் ஒரு விதமான எதிர்பார்ப்பு கொண்டாடிகள் நடுவே ஏற்பட்ட நிலையில், அதனை பன் மடங்கு நிறைவு செய்யும் விதமாக விக்ரம் வெளிவந்திருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,269. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.