Show all

சூழல்! ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இணையத்தொடர்

தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள சூழல் இணையத்தொடர் நாளது 03,ஆனியில் (ஜூன் 17) அமேசான் எண்ணிமத் தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பாடாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

22,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இணையத்தொடர் சூழல் நாளது 03,ஆனியில் வெளியீடு என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் 'ஓரம் போ' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து, 'வா குவாட்டர் கட்டிங்', 'விக்ரம் வேதா' போன்ற படங்களை இயக்கியுள்ளனர். 'விக்ரம் வேதா' கொண்டாடிகளின் நடுவே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இவர்கள் திரைக்கதை எழுதியுள்ள இணையத்தொடர் 'சூழல்'.  

சிலிர்ப்பூட்டும் துப்பறிவு கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த இணையத்தொடரில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த தொடரை பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கியுள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,270. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.