Show all

திரிசா நடிப்பில் வெளிவர உள்ள கர்ஜனை, பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 வைத் தொடர்ந்து அடுத்த படம் ராங்கி

ராங்கி என்று பெயர் சூட்டப்பட்ட, திரிசா நடிக்கும் புதிய படத்திற்கு நேற்று தொடக்கவிழா கொண்டாடப் பட்டது. எம்.சரவணன் இயக்கப் போகிறார் இந்தப் படத்தை.
07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிசா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு தொடக்கவிழா சென்னையில் நேற்று நடந்தது.
இந்தப் படத்திற்கு ராங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தில் உருவாகும்,
இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்தப் படம் அதிரடி படமாக அமையும் என்று சொல்லப் படுகிறது.
திரிசா தற்போது சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் திரிசாவின் அக்காவாக சிம்ரன் நடிக்கிறார். திரிசா நடிப்பில் அடுத்ததாக கர்ஜனை, பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,128.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.