Show all

திடீர் திருமணம் முன்னெடுத்த பாலாஜி! ராஜா ராணி 2 தொடரின் பெண்போக்கிரி அர்ச்சனாவின் கணவர் வேடத்து நடிகர்

திடீர் திருமணம் முன்னெடுத்துள்ளார், ராஜா ராணி 2 தொடரின் பெண்போக்கிரி வேடத்தில் நடிக்கும் அர்ச்சனாவின் கணவராக வரும் பாலாஜி.

22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் நடித்து வரும் பாலாஜிக்கு தற்போது முடிந்துள்ள திருமணத்தை விஜய் தொலைக்காட்சி நயவர்கள் கொண்டாடி வருகின்றனர். 

ராஜா ராணி 2 தொடரின் பெண் போக்கிரியாக தோன்றும் அர்ச்சனாவின் கணவராக நடித்து வருகிறவர்தான் பாலாஜி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடருக்கும் தனியாக நயவர்கள் வட்டம் இயங்கத்தான் செய்கிறது. 

இந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் பலரும் நயவர்களின் பேரறிமுகமாக மாறி இருக்கின்றனர். ஒரு சில நடிகர்கள் தொடரின் துணை நடிகர்களாக இருந்தாலும் கூட அவர்களும் எளிமையாக நயவர்களின் மனதில் இடம்பிடித்து விடுகிறார்கள். 

திடீர் திருமணம் முன்னெடுத்த ராஜா ராணி 2 தொடரின் பெண்போக்கிரி வேடத்தில் நடிக்கும் அர்ச்சனாவின் கணவராக பாலாஜி நடித்துக் கொண்டிருப்பதால் பல நேரங்களிலும் இவருடைய நடிப்பை தெளிவாக காட்ட முடிகிறது என்று நயவர்கள் பாராட்டி வருகின்றனர். பெண்போக்கிரியின் கணவராக இருந்தாலும் பாலாஜி தனது குடும்பத்திற்காக பலமுறை தனது மனைவியை வெறுத்திருக்கிறார். இதனாலே இவரை பலருக்கும் பிடித்து விட்டது என்று பாராட்டி வருகின்றார்கள். 

பாலாஜியின் திருமணத்திற்கு சின்னத்திரை பேரறிமுகங்கள் பலரும் கலந்து கொண்டனர். அவர் நடிக்கும் ராஜா ராணி 2 தொடரின் பேரறிமுகங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவி வருகிறது. 

இதை பார்த்த நயவர்கள் பலர் இதற்கு அர்ச்சனா வரவில்லையா? அவருடைய கனவருக்கு திருமணமா? என்றெல்லாம் கலாய்த்து பதிவிட்டு வருகிறார்கள். திருமண புகைப்படங்களை பார்த்து நயவர்கள் பலர் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள். 

பாலாஜி தன்னுடைய திருமணத்தைப் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாலும் திருமண புகைப்படங்களை பார்த்தது நயவர்கள் பேரளவாக வாழ்த்து கூறி வருகின்றனர். பாலாஜியின் திருமணத்தில் அர்ச்சனா மட்டும் கலந்து கொள்ளாததால் நயவர்கள் சிலர் அப்போ இது அர்ச்சனாவுக்கு தெரியாத கல்யாணமா என்று கேட்டிருக்கின்றனர்.

அது மட்டும் அல்லாமல் ஒரு சிலர் ஏற்கனவே அர்ச்சனாவை வைத்து நீங்க சிரமப்படுவது போதாது என்று இப்ப வேற கல்யாணம் பண்ணி இருக்கீங்களா? என்றும் பதிவிட்டு கலாய்த்து வருகிறார்கள். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,364.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.