Show all

எல்லா மொழிக்காரனையும் வாழ வைக்கும் சென்னை என்னையும் வாழ வைக்காதா! தேசிய விருது பாடகர் வேதனைப் பதிவு

26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜோக்கர் திரைப்படத்தில் வரும், ஜாஸ்மின் பாடலை பாடியவர் சுந்தரய்யர். இந்த பாடலுக்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார் அவர். வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் பாடகர் சுந்தரய்யர், வாய்ப்பு கோரி தமது முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

தர்மபுரியில் பிறந்திருக்க கூடாது. தமிழ்நாட்டில் பிறந்திருக்க கூடாது. முதன்மையாக தமிழனாகப் பிறந்திருக்க கூடாது. தேசிய விருது வாங்கிய ஆண்டே வறுமையில் இருந்த பாடகர் நானாகத்தான் இருக்கும். எல்லா மொழிக்காரனையும் வாழ வைக்கும் சென்னை என்னையும் வாழ வைக்காதா? என வேதனையுடன் அவர் பதிவிட்டுள்ளார்.

பாட வாய்ப்பு கொடுங்கள் அல்லது வாழ பணம் கொடுங்கள் என்று இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், பெரும் பணம் படைத்தவர்கள், நண்பர்கள் என 200 பேருக்கு செய்தி அனுப்பியதாகவும், ஆனால், யாரிடமிருந்தும் வாய்ப்பும் வரவில்லை, பணமும் போடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழக்கமில்லாத நண்பர் தீபன் என்பவர் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் போட்டிருப்பதாகவும், வேலுரைச் சேர்ந்த சீனிவாசன் என்ற நண்பர், குழந்தைகளின் படிப்பு செலவினை ஏற்பதாக கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள பாடகர் சுந்தரய்யர், தனது வாழ்க்கையில் அவர்கள் மறக்க முடியாத நபர்களாகிவிட்டார்கள் என்றும் நன்றி தெரிவித்துள்ளார். ஜோக்கர் படத்திற்கு பிறகு அண்மையில் வெளியான அறம் படத்திலும் புது வரலாறே பாடலையும் சுந்தரய்யர் பாடியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,907.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.