Show all

ஐசுவர்யாவை வைத்து தலையில் மிளகாய் அரைக்கப் பட்ட சென்றாயன்! (என்ன அது சாயமா? சரி சரி, எல்லாம் ஒரே நிறந்தான் போங்க)

26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் வீட்டில் இருந்து ஞாயிறன்று சென்றாயன் வெளியேற்றப்பட்டார். நியாயப்படி ஐசுவர்யா தான் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஐசுவர்யாவைக் காப்பாற்ற மக்கள் வாக்களித்திருப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஏனென்றால் ஐசுவர்யா மீது மக்கள் அவ்வளவு கடுப்பாக இருந்தார்கள். இது அந்த நிகழ்ச்சியை நடத்தும் கமல்காசனுக்கும் தெரிந்தே இருந்தது.

நிகழ்ச்சி மேடையில் பங்கு பெற்றவர்கள் ஒரு கைத்தட்டல் கூட இல்லாமல் வெறிக்க வெறிக்க எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கமலின் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வடிவேல் கோவை சரளாவிடம், இரண்டும் ஒன்றும் எத்தனை என்று கேட்க, கோவை சரளா மூன்று என்று சொல்ல, வடிவேல்  இரண்டும் ஒன்றும் நாலுடி இது புருசன் கணக்கு என்று சொல்லி, கோவை சரளாவிடம் திரும்பக் கேட்க, அவர் இரண்டும் ஒன்றும் நாலு என்று சொன்னதைப் போல பிக்பாஸ் கணக்கை ஒப்பித்துக் கொண்டிருந்தார் கமல்.

பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து வரும் தமிழ்த் திரையுலக  பிரபலங்கள் சென்றாயனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் கள்ள ஓட்டு போட்டு ஐசுவர்யாவை வென்றதாகக் காட்டியிருக்கலாம். ஆனால் சென்றாயன் மக்களின் மனதை வென்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். இயக்குனர் நவீனோ பிக் பாஸ் வீடு ஒரு மூடர்கூடம் என்று சாடியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வேகத்தில் சென்றாயன் சிம்புவை சந்தித்து பேசியுள்ளார். சிம்பு அவருக்கு திருமூலரின் திருமந்திரம் புத்தகத்தை பரிசளித்துள்ளார். அப்போது மகத்தும் உடனிருந்திருக்கிறார். என் நண்பன் சிம்பு சென்றாயனை வரவேற்றார் என்று கூறி அந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்களை கீச்;சுவில் வெளியிட்டுள்ளார் மகத்.

பிக் பாஸால் ஐசுவர்யாவை வைத்து தலையில் மிளகாய் அரைக்கப் பட்ட (என்ன அது சாயமா? சரி சரி, எல்லாம் ஒரே நிறந்தான் போங்க) சென்றாயனை சிம்பு சந்தித்து பரிசு கொடுத்ததை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமையாக கூறி வருகிறார்கள்.

நான் எதிலுமே முதலாவதாக வந்தது இல்லை என்று சென்றாயன் கமலிடம் அப்பாவியாக தெரிவித்தார். பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இருக்க விரும்பிய அவரை பித்தலாட்டம் செய்து அனுப்பி வைத்துவிட்டார்கள்.

ஆனாலும் சென்றாயன் பாவம் இல்லை ; தமிழ் மக்கள்தாம் உண்மைக்குத் தோள் கொடுப்பார்களே!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,907.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.