Show all

நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜை ஆதரிப்பது ஏன்? சீமான் தெரிவிக்கும் கருத்து.

சின்னத்திரை பார்வையாளர்களையும், பெரியத்திரை பார்வையாளர்களையும் ஆர்வத்தை கிளறி சுண்டியிழுக்கக் காத்திருக்கும் இரண்டு நிகழ்ச்சிகள்: ஒன்று- நடிகர் சங்கத் தேர்தல். மற்றது- கமல் தொகுக்கும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக்பாஸ்.  இரண்டுக்கும் வரும் ஞாயிற்றுக் கிழமை வரை காத்திருக்க வேண்டும்.

01,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் வென்று வருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன் என்கிறார் சீமான்.

நடிகர் சங்க தேர்தல் வரும் ஞாயிற்றுக் கிழமை  நடைபெறுகிறது. இதில், நடிகர் கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும், நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும்,  மோதுகின்றன.  இருதரப்பினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர்கள் பலரும், தங்கள் ஆதரவு இன்னாருக்கு என்று வெளிப்படையாக தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் வென்று வருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன் என்கிறார். 

மேலும், இது நடிகர் சங்க தேர்தல் தானே.  நாடாளுமன்ற தேர்தல் இல்லையே.  இவ்வளவு பரபரப்பாக்க வேண்டிய தேவை இல்லை.  கடந்த  காலங்களில் அவர்களுக்கு (விசால் அணி) வாய்ப்பு கொடுத்தார்கள். முறையாக இயங்கவில்லை என்பதால்தான் இவ்வளவு எதிர்ப்புகள் வருகிறது.   

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில் ஐயா பாக்யராஜை நான் அறிவேன். அவர் எந்த வேலையைச் செய்தாலும் அதில் நேர்மையாக இருப்பார். எழுத்தாளர் சங்கத்திற்கு தலைவராக இருக்கும்போது சர்க்கார் படப் பிரச்சனையில் அவருக்கு எவ்வளவோ நெருக்கடிகளைக் கொடுத்தபோதும் நேர்மையின் பக்கம் நின்றார். அதனால் அவர் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்.   அவர் வெல்லுவதற்கு நான் வாழ்த்துகிறேன் என்று தனது நிலைபாடாகத் தெரிவிக்கிறார் சீமான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,185. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.