Show all

மக்கள் போராட்டம் வென்றது! இது ஆங்காங்கில்; இது போன்றவற்றில் நாம் போராடவேயில்லை.

நாம், சரக்கு-சேவை வரி என்ற பெயரில் மாநில அரசின் வரி வாங்கும் அதிகாரத்தை நடுவண் அரசுக்கு கையளித்து விட்டு நடுவண் அரசிடம் கையேந்தி பிழைக்கிறோம். நீட் என்ற பெயரில் நமது மருத்துவக் கல்லூரிகளையெல்லாம் நடுவண் அரசுக்கு கையளித்து விட்டு வக்கற்று தற்கொலை முடிவைத் தீர்வாக்கிக் கொண்டுள்ளோம்.

01,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இந்தியாவில் நமக்கு இருக்கிற தமிழக அரசு போல, சீனாவிற்கு கீழ் ஆங்காங்கிற்கு தனி அதிகாரம் இருக்கிறது. 

கையாலாகாத தலைமையைக் கொண்டுள்ள நமது தமிழக அரசு:- வரிவாங்கும் அதிகாரம், மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களைத் தேர்தெடுக்கும் அதிகாரம் ஆகியவற்றை நடுவண் அரசுக்கு விட்டுக் கொடுத்து விட்டு, மக்களை அலைகழித்துக் கொண்டிருக்கிறது.  

குற்றவாளிகளை தண்டிக்கும் அதிகாரத்தை சீனாவிற்கு கையளிக்க ஆங்காங் அரசு முடிவெடுத்தது. 
இதனால், ஆங்காங் அரசு குற்றவாளிகளைக் கையாளும் அதிகாரத்தை சீனாவிற்கு விட்டுத்தரக் கூடாது என, கடந்த சிலநாட்களாக  மிகப் பெரிய மக்கள் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் குற்றவாளிளை சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை ஆங்காங் அரசாங்கம் கைவிடுவதாக அதன் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.
“எங்கள் நடவடிக்கையில் இருந்த குறைபாடுகள் மற்றும் வேறு பல காரணிகள் சர்ச்சைகளை தூண்டிவிட்டதற்கு நான் ஆழ்ந்த துக்கத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறேன்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், சீனாவின் செல்வாக்கு அதிகமாகிவிடும் என்று போராட்டக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அமைதி நிலையை மீண்டும் கொண்டு வருவதே தற்போது ஆங்காங்கின் முதன்மையான நோக்கம் என்றும் லாம் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,185. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.