Show all

எடுக்கப்படவுள்ள படவெற்றியின் மீது இவ்வளவு நம்பிக்கையா! அது யார் நடிப்பில் உருவாகிறது

தற்காலிகமாக ஏகே 62 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ள, படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஏகே 62 படத்தின் எண்ணிமத்தள உரிமை விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் எண்ணிமத்தள உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. சரி சரி நடிகர் யார் என்பது உங்கள் ஆர்வமானால் செய்தியைத் தொடர்ந்து படியுங்கள். 

12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: தற்காலிகமாக ஏகே 62 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ள நடிகர் அஜித்தின் 62-வது படத்தின் எண்ணிமத்தள உரிமையை பேரறிமுக நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அஜித் நடிக்க உள்ள அவரின் 62-வது படத்தை நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தொடக்கக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையமைக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கபட உள்ளது.

இப்படத்திற்கு தற்காலிகமாக ஏகே 62 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஏகே 62 படத்தின் எண்ணிமத்தள உரிமை விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் எண்ணிமத்தள உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. 

ஏகே 62 படத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த மேம்பாடுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள துணிவு படத்தின் எண்ணிமத்தள உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் முழுமையாக இன்னும் ஒரு மாத இடைவெளியில் பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொகேன் என மிகப்பெரிய மின்மினிப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,446.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.