Show all

கொண்டாடுகிறது லைகா நிறுவனம்! சோழப் பேரரசை கொண்டாடிய தொழில்அதிபர் ஆனந்த் மகிந்திராவை

சோழப்பேரரசு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நாம் உண்மையில் உணரவில்லை என்றும் அதன் வரலாற்று முதன்மைத்துவம் குறித்து உலகிற்கு உரக்க சொல்ல தவறிவிட்டோம் என்றும் பதிவு செய்து சோழப் பேரரசை கொண்டாடிய தொழில்அதிபர் ஆனந்த் மகிந்திராவை- பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க அழைத்திருக்கிறது லைகா நிறுவனம். இதோ நாங்கள் ஐந்து மொழிகளில் உரக்கச் சொல்ல வந்து விட்டோம் என்று. 

13,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், இந்தப் படத்தை பாருங்கள் என பேரறிமுகத் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா அவர்களுக்கு லைகா நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சோழப் பேரரசின் பெருமைகளையும் இராசராச சோழனின் சிறப்புகளையும் தனது கற்பனையும் கலந்து தெய்வத்திரு கல்கி எழுதிய நாவல்தான் 'பொன்னியின் செல்வன்' என்பதும் இந்த நாவல் தற்போது மணிரத்னம் கைவண்ணத்தில் திரைப்படமாக உருவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் இந்த படத்தின் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இயல்பூக்கமான திறனாய்வகளைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது கீச்;சுப் பக்கத்தில் தஞ்சை பெரிய கோயில் குறித்த பெருமைகளை கூறும் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தக் காணொளியில் சரண்யா என்பவர் தஞ்சை பெரிய கோவிலுக்கு நேரடியாக சென்று அதன் சிறப்பு குறித்து விளக்குகிறார். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலை யுனெஸ்கோ உலக மரபியல் சின்னமாக அங்கீகரித்தது என்றும், எந்தவித இயந்திரமும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலை சோழர்கள் கட்டி உள்ளார்கள் என்றும் ஆறு கிலோ மீட்டர் தூரத்துக்கு சாய்வு தளம் அமைத்து கோவில் கோபுரத்தைக் கட்டினார்கள் என்றும் விளக்கியுள்ளார். 

ஆனந்த் மகிந்திரா இந்தக் காணொளி குறித்து, 'திறமையான வடிவமைப்பாளர்கள் உருவாக்கிய அற்புதமான கோவில் தஞ்சை பெரிய கோவில் என்றும் சோழப்பேரரசு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நாம் உண்மையில் உணரவில்லை என்றும் அதன் வரலாற்று முதன்மைத்துவம் குறித்து உலகிற்கு உரக்க சொல்ல தவறிவிட்டோம்' என்றும் பதிவு செய்துள்ளார். 

மேலும் இன்னொரு பதிவில் 'பிரிட்டிஷ் பேரரசு பற்றியே அதிகமாக கல்வியில் கற்ற தலைமுறையை சேர்ந்த நாம், சோழ பேரரசு குறித்து அறியாமலேயே இருந்ததற்கு வருந்த வேண்டும் என்றும் சோழப்பேரரசு குறித்த பல தகவல்களை வரவிருக்கிற பொன்னியின் செல்வன் படத்தில் ஆதாரத்துடன் காண்பிக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்' என்றும் கூறியுள்ளார். 

ஆனந்த் மசிந்திரா கீச்சுவிற்கு கருத்து பதிவிட்டுள்ள லைகா நிறுவனம், 'உங்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உறுதியாகப் 'பொன்னியின் செல்வன்' இருக்கும் என்றும் இந்த படம் இன்று வெளியாகியுள்ளது என்றும் இந்த படத்தை நீங்கள் பாருங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,387.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.