Show all

இசைவெளியீட்டு விழா! பேரளாவான நடிகைகள் பங்குபெறும் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் படமான லெஜண்ட்டின்

தி லெஜண்ட் படத்தின் இசை மற்றும் விளம்பர காணொளி வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

16,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பேரளவான படத்தைத் உருவாக்கி வருகிறது. இந்தப்படத்திற்கு தொல்மரபு என்ற பொருளில், தி லெஜன்ட் என்று பெயரிடப்பட்டிருக்கிறார்கள். 

இந்தப் படத்தின் கதைத்தலைவனாக சரவணா பல்பொருள் அங்காடியின் சொந்தக்காரர் சரவணன் நடிக்கிறார். உணர்ச்சி, அதிரடி, காதல், நகைச்சுவை என அனைத்தும் ஒருங்கிணைந்த கலவைப்படமாக, தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது பழம்பெருமையர் சரவணன் நடிக்கும் தி லெஜண்ட்

ஜேடி-ஜெர்ரி ஆகியோர் படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடல் மொசலோ மொசலுவை பேரறிமுக இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமௌலி மற்றும் சுகுமார் வெளியிட்ட நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாடலான வாடி வாசல் அண்மையில் வெளியிடப்பட்டது. 

சின்னக் கலைவாணர் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் இதுவாகும். ஒரு அன்பான எளிய மனிதன் தனது அறிவாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி பெருமைமிக்க மனிதன் எப்படி உருவாகிறான் என்பதே படத்தின் மையக்கதையாகும்.

இதையடுத்து தி லெஜண்ட் படத்தின் இசை மற்றும் விளம்பர காணொளி வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. படத்தில் பணியாற்றிய நடிகையர்களான பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன், ஷ்ரத்தா சிறீநாத், சிறீலீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி நடிக, நடிகைகள் பங்கேற்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,264.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.