Show all

இலங்கையின் மக்கள் போராட்டம் ஐம்பதாவது நாளை எட்டியுள்ளது.

இராஜபக்சே குடும்பத்தினர் அரசியலில் இருந்து விலகினால் மட்டுமே எங்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று போராடி வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

15,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் கட்டாயத்தேவை பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் வன்முறை அரங்கேறிய நிலையில் தலைமைஅமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

இதற்கிடையே, புதிய தலைமைஅமைச்சராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். நிதித்துறை பொறுப்பையும் அவரே ஏற்றுள்ளார். இலங்கையில், புதிய அரசு அமைந்தாலும், அந்நாட்டு அதிபர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், இலங்கை அதிபர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை ஆக்கிரமித்து தொடர் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று போராட்டம் 50-வது நாளை எட்டியுள்ளது. போராட்டம் 50-வது நாள் எட்டியதை குறிக்கும் வகையில் பேரணியும் நடைபெற்றது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,263.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.