Show all

தளபதி 63ல் நடிக்க வாய்ப்பு பெற்ற பூவையார்! விஜய்யுடன் தனது சந்திப்பை கூறி மகிழ்கிறார் சிறந்தபாடகர்6 புகழ் பூவையார்

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சிறந்தபாடகர்6 நிகழ்ச்சியில், சென்னை தமிழ் பேசியும், தன்னுடைய கானா பாடலால் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து வரும் குழந்தை மின்மினி பூவையார். 

தற்போது இவர் விஜய் 63 படத்திலும் நடித்து வருகிறார். தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 'விஜய் 63' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டுதான் வருகிறது. 

இந்தப் படத்தில் விஜய்க்கு கதைத்தலைவியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், பரியேறும் பெருமாள் புகழ் கதிர், காமெடி நடிகரான விவேக், யோகிபாபு போன்றவர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் சிறந்தபாடகர்6 பூவையர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு பாடலையும் பாடப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் இந்தப் படத்தின் போது விஜய்யை சந்தித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார் பூவையர். இதுகுறித்து பேசியுள்ள அவர், 'நல்லா பாடுற அதை விட நல்லாவே எல்லாரையும் கலாய்க்கிற, இப்படியே போனால் வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்துக்கு வருவ' என்று விஜய் கூறியதாக பூவையர் மிகவும் மகிழ்ச்சியுடன்  தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,092.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.