Show all

கலக்கத்தின் உச்சத்தில் படக்குழுவினர்! கங்கனா ரணாவத்தின் தாகத் படம் படுதோல்வி

எண்பது தொன்னூறு கோடி ரூபாய் செலவுத் திட்டத்தில் உருவாக்கப்பட்ட கங்கணா ரணாவத்தின் தாகத் ஹிந்தித் திரைப்படம் வெறுமனே 3 கோடி அளவுக்கு கூட வசூல் எடுக்கவில்லை. தயாரிப்பாளர்களுக்கு கடுமையான நட்டம் ஏற்பட்டிருக்கும் என கவலை தெரிவிக்கிறார்கள்.

13,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கங்கனா ரணாவத்தின் தாகத் படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. படத்தின் செயற்கைக்கோள் மற்றும் எண்ணிம உரிமையைப் பெறுவதற்கு எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்கிற தகவல் ஹிந்தி திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த கிழமை திரையங்குகளில் வெளியானது தாகத் ஹிந்தித் திரைப்படம். ஹிந்தித் திரையுலகின் பேரரசி கங்கனா ரணாவத் இந்தப்படத்தில், முதன்மைத்துவ வேடத்தில் நடித்திருந்தார். படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் பல திரையரங்குகளில் படம் திரையிடுவது களையப்பட்டது.

பொதுவாகவே படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே அதன் செயற்கைக்கோள் மற்றும் எண்ணிம உரிமைகளை விற்றுவிடுவர்கள். இந்தப் படத்தைப் பொறுத்த வரை படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு நல்ல தொகைக்கு விற்கலாம் எனத் தயாரிப்பாளார்கள் காத்திருந்தனர். ஆனால் படம் மோசமான தோல்வியைச் சந்தித்தால் எந்த எண்ணிம வெளியீட்டு நிறுவனமும் இதன் உரிமையைப் பெற முன்வரவில்லை. எனத் தெரிவிக்கிறார்கள் ஹிந்தித் திரையுலக வட்டாரத்தினர்.

மேலும் தாகத் படத்தின் திரையரங்க வெளியீட்டை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மேற்கொண்டது. இருப்பினும் எண்ணிம உரிமையை அவர்கள் பெறவில்லை. தயாரிப்பு தரப்பு அமேசான் பிரைம் எண்ணிம நிறுவனத்துக்கு படத்தை விற்க முயற்சி செய்து வருகிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் என்ன நிலவரம் என்பது தெரியும் என்கிறார்கள். 

எண்பது தொன்னூறு கோடி ரூபாய் செலவுத் திட்டத்தில் உருவாக்கப்பட்ட கங்கணா ரணாவத்தின் தாகத் ஹிந்தித் திரைப்படம் வெறுமனே 3 கோடி அளவுக்கு கூட வசூல் எடுக்கவில்லை. தயாரிப்பாளர்களுக்கு கடுமையான நட்டம் ஏற்பட்டிருக்கும் என கவலை தெரிவிக்கிறார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,261.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.