Show all

விரைவில், இந்தியாவில், கூகுளும் முன்னெடுக்க வுள்ளதாம் மின்வணிகம்! அமேசான், பிளிப்கார்ட் போல

எண்பது தொன்னூறு கோடி ரூபாய் செலவுத் திட்டத்தில் உருவாக்கப்பட்ட கங்கணா ரணாவத்தின் தாகத் ஹிந்தித் திரைப்படம் வெறுமனே 3 கோடி அளவுக்கு கூட வசூல் எடுக்கவில்லை. தயாரிப்பாளர்களுக்கு கடுமையான நட்டம் ஏற்பட்டிருக்கும் என கவலை தெரிவிக்கிறார்கள்.

14,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் அமேசான், ப்ளிப்கார்ட் உட்பட ஒரு சில நிறுவனங்கள் மின்வணிகம் மூலம் கோடிக்கணக்கில் வணிகம் செய்து வருகின்றன.
 
மேலும் சில நிறுவனங்களை இந்தியாவில் மின்;வணிகம் செய்ய ஒன்றிய அரசு அனுமதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒன்;றிய அரசு கடந்த மாத இறுதியில் எண்ணிம வணிகத்திற்கான திறந்த சந்தை குறித்த ஆலோசனையை செய்தது. இதனையடுத்து அடுத்த காலாண்டில் 30 ஆயிரமாயிரம் விற்பனையாளர்களையும், 10 ஆயிரமாயிரம் வணிகர்களையும் இயங்கலையில் இணைக்க முடியும் என ஒன்றிய அரசு நம்புகிறது. மேலும் மின்வணிகத்தில் இந்தியாவின் சில பெருநகரங்கள் மற்றும் 100 நகரங்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் தற்போது கூகுள்பே என்ற பண பரிவர்த்தனை செயலியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் மிகப் பெரிய அளவில் வரவேற்பை கூகுள்பே பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக மின்வணிகத்திலும் இறங்கினால் அதிலும் வெற்றி அடையலாம் என்று கூகுள் நம்புகிறது. ஆனால் அதே நேரத்தில் மின்வணிகம் குறித்து இந்திய அரசிடம் கலந்துரையாடி வருவதை அந்நிறுவனம் வெளிப்படையாக இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்தியாவில் கூகுள் நிறுவனம் மின்வணிகச் சேவையில் ஈடுபட தொடங்கினால் அமேசான், ப்ளிப்கார்ட் உட்பட ஒரு சில நிறுவனங்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

கூகுள் நிறுவனம் நேர்மையாகவும் பயனர்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் நிறுவனம் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் உள்ளது என்றும், லாப நோக்கம் இருந்தாலும் அதில் லாபத்தின் விழுக்காட்டு அளவ குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இந்தியர்களிடம் உள்ளது.

எனவே கூகுள் நிறுவனம் இந்தியாவில் மின்வணிகச் சந்தையைத் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்திய மக்களிடம் உள்ள நிலையில் கூகுள் இதுகுறித்து என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,262.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.