Show all

ஜேசுதாஸ் குறித்த சுப்ரமணியன்சுவாமியின் சுட்டுரை குறும்பு

பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் இந்து மதத்துக்கு திரும்பியுள்ளதாக பாரதிய ஜனதா பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன்சுவாமி வெளியிட்ட கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரமணியன்சுவாமி தனது சுட்டுரை பக்கத்தில்,

‘ஜேசுதாஸ் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்பியுள்ளார். அப்படி திரும்பியிருந்தால் அதனை இந்துக்கள் அனைவரும் வரவேற்கலாம்’ என்று கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் சுப்ரமணியன்சுவாமி வெளியிட்ட செய்திக்கு  ஜேசுதாசின் மனைவி பிரபா மறுப்பு தெரிவித்ததோடு,

‘இது போன்ற செய்திகள் எப்படி பரவுகின்றன என தெரியவில்லை’ என்று  வருத்தம் தெரிவித்திருந்தார்

     கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள தாய் மூகாம்பிகை கோயிலுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் உள்ளவர் ஜேசுதாஸ். ஏராளமான ஐய்யப்பன் பாடல்களையும் பாடியுள்ளார். நாடு முழுவதும் உள்ள இந்து ஆன்மீகத் தளங்களுக்கு சென்று இசை கச்சேரி நடத்தி வருகிறார். ஆனால் ஜேசுதாஸ் பிறப்பால் கிறிஸ்தவர் ஆவார்.  தற்போது 76 வயதான ஜேசுதாஸ்,14 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். பத்ம ஸ்ரீ, பத்மவிபூசன் விருதுகளைப் பெற்றுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.