Show all

சிவகார்த்திகேயன் செல்லமாட்டாராம்! பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளராக அழைத்தால்

27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  சீமராஜா திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு பட விளம்பரத்துக்காக பல வேலைகளை சிவகார்த்திகேயன் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக சிவகார்த்திகேயன் பேட்டியின் போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா என சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக பணிபுரியும் படி கேட்டால், நான் மாட்டேன் என்றுதான் சொல்வேன். கிட்டதட்ட ஆறு ஆண்டுகள் தொகுப்பாளராக இருந்துவிட்டேன்.

இப்போது நடிப்பில் மட்டுமே என்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். இன்னும் நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன். அதனை பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறேன் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,908.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.