Show all

பெருங்கற்கால தமிழர் ஈமச்சின்னமான நெடுங்கற்கள் சென்னிமலை அருகே கொடுமணலில் கண்டுபிடிப்பு

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119:ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம் கொடுமணல் ஊராட்சியில் கொடுமணல் தொல்லியற் களம் 50 ஹெக்டர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி புதைகுழிகள் அடங்கிய பகுதியாக காணப்படுகிறது. இதனை சுற்றி சுமார் 15 ஹெக்டர் பரப்பளவில் கற்கால குடியிருப்பு பகுதி இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு படிப்படியாக ஆய்வுகள் நடத்தியதில் இதுவரை, 48 அகழிகள் மற்றும் 13 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் அதிக அளவில் வெவ்வேறு வடிவங்களில் நெடுங்கல் காணப்படுகிறது.

நெடுங்கல் என்பது ஒரு பெருங்கற்கால ஈமச்சின்ன வகையாகும். இக்கல் இறந்தவர்கள் நினைவாகவோ அல்லது இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ எழுப்பப்படுகிறது. இதன் கீழே தாழி காணப்படலாம் அல்லது நினைவுச் சின்னமாக அமைந்திருக்கும். இக்கல் சில இடங்களில் மேற்புறம் கூர்முனையுடன் காணப்படுகிறது. சில இடங்களில் பல நெடுங்கற்கள் ஒரு கல் வட்டத்தின் பகுதியாகவும் அமைந்துள்ளன. கொடுமணலில் அமைந்துள்ள நெடுங்கல் உயரமான நெடுங்கற்களுள் ஒன்றாகும். தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கொடுமணலில் களம் இறங்கி ஆய்வு செய்து வருகிறது. இதன் மூலம் கொடுமணலில் பல அரிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

நடுவண் அரசில் உள்ள பார்ப்பனிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வழக்கம் போல் கிடப்பில் போடாமல் ஆய்வுசெய்ய வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,684

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.