Show all

சங்கரதாச சுவாமிகள் அணி! தமிழக நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாக்யராஜ் அணிக்கு பெயர் சூட்டி அசத்தல்

ஒவ்வொரு மாநிலத்திற்கும் நடிகர் சங்கம் அமைந்த விட்ட போதும், தமிழகத்தில் இருக்கிற நடிகர் சங்கத்தை இன்னும் தென் இந்திய நடிகர் சங்கம் என்ற பெயரிலேயே அழைத்துக் கொண்டு வருகிற, தமிழக நடிகர் சங்கத் தேர்தல் பாக்யராஜ் நுழைவுக்குப் பின் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பஞ்சாயத்து தேர்தல் மாதிரி- களை கட்டத் தொடங்கியுள்ளது தமிழக நடிகர் சங்கத்திற்கான தேர்தல். விசாலின் அணிக்கு பெயர் பாண்டவர் அணியாம். என்னங்கடா இது! தமிழக நடிகர் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமுன்னு பெயராம். அதில் போட்டியிடும் வேட்பாளர் அணிக்கு வடஇந்திய தொல்கதையின் கதைத்தலைவர்கள் அணியின் பெயராம். சேரன் அணி, சோழன் அணி, பாண்டியன் அணி, மூவேந்தர் அணி, பாரிஅணி, வல்வில் ஓரி அணி என்றெல்லாம் தமிழக கதைத் தலைவர்களின் பெயருக்கா பஞ்சம்?  விசாலின் அணிக்கு எதிராக, பாக்யராஜ் தனது அணியின் பெயரை ‘சங்கரதாச சுவாமிகள் அணி’ என்று தமிழக நாடகத் தந்தையின் பெயரை   அறிவித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

தமிழக நடிகர் சங்க தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே திடீர் திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறி, உள்ளாட்சித் தேர்தலுக்கு இணையான பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தில் தற்போது, சரத்குமார், ராதாரவி இல்லாததால், விசாலை எதிர்த்து யார் களம் இறக்கப்படப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது திருப்பத்தை ஏற்படுத்தியது. அடுத்து அணிக்கு ‘சங்கரதாச சுவாமிகள் அணி’ என்று பெயர் சூட்டிய அசத்தல்.

தமிழக நடிகர் சங்கத்திற்கு அடுத்த ஞாயிற்றுக் கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், வெற்றியை ஈட்ட வேண்டும் என்பதற்காக இரு அணியினரும் வியூகம் அமைத்து, காய்களை நகர்த்த தொடங்கியுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,180.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.