Show all

ரவுடிக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையையும் பார்த்து...

காதலும் காதல் நிமித்தத்தால் ஏற்படும் காமெடி கலந்த ஆக்சனும் தான் நானும் ரவுடிதான்.

ரவுடிக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையையும் பார்த்து போலீசாக வேண்டும் என்ற தனது லட்சியத்தை மாற்றிக்கொண்டு ரௌடியாக வேண்டும் என்ற கனவுகளோடு வளர்கிறார் ஒரு சிறுவன். அந்தக் குழந்தையே விஜய் சேதுபதிதான் என்கிற ரீதியில் தன்னை மிகப்பெரிய ரௌடியாக நினைத்துக்கொண்டு வாழ்ந்தும் வருகிறார். எனினும் செய்யும் அத்தனையும் ரவுடியாகக் காட்டிக்கொள்ள வேண்டி செய்யும் வெட்டி பில்டப்புகளாகவே இருக்கின்றன. இதற்கிடையில் போலீஸ் செலக்சன் தேர்வுகளும் நடந்தேறுகின்றன.

இந்நிலையில் அவரது கண்களில் படுகிறார் அழகிய, அதே சமயம் சோகமான  நயன்தாரா.

காது கேக்காத நயன்தாராவைப் பார்த்தவுடனேயே காதல் பற்றிக்கொள்கிறது விஜய் சேதுபதிக்கு.

காதல் மலரும் தருவாயில் நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய பிரச்னையையும் மிகப்பெரிய இழப்புமாய் விஜய் சேதுபதிக்கு ஒரு பொறுப்பைக் கொடுக்கிறார் நயன். அது என்ன அதை விஜய் சேதுபதி நிறைவேற்றினாரா இல்லையா என்பதை காமெடி கலந்த களேபரப் பின்னணியில் க்ளைமாக்ஸ் வைக்கிறது இந்த நானும் ரவுடிதான் .

நயன்தாரா படம் முழுவதும் வியாபித்துள்ளார். ராஜாராணி, மாயா, இப்படி நயன்தாராவின் நடிப்புக்கான மைல்கற்கள் லிஸ்டில் இந்தப் படத்தையும் இணைத்துக்கொள்ளலாம்.

கிஸ் பண்ணப் போறியா அப்போ நான் சொல்றத செஞ்சிட்டு அப்பறம் கிஸ் பண்ணு,

என சொல்லி ரொமான்ஸ் உணர்வில் நெருங்கும் விஜய் சேதுபதியை குழப்பிவிடுவதும், அவ்வப்போது கத்த வைத்துவிட்டு அமைதியாக தரையைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு என்கிட்ட பேசினீங்களா சாரி லைட்டா காது,

யார்கிட்டயும் சொல்லிடாதீங்க எனக் கெஞ்சுவதுமாய் நயன்தாராவின் நடிப்பு அடுத்தக் கட்டம் . இனி டப்பிங் பேசுவோருக்கும் வேலையில்லை. நயனின் குரல் அவரது டப்பிங் குரலை விடவும் நன்றாக இருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.