Show all

படங்களில் நடிப்பதைவிட கலைநிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக இயங்க முடிவதாக உணர்கிறாராம் ஓவியா.

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் முதல் பருவத்தில் வெற்றி பெற்றது ஆரவ் என்றாலும் மக்களின் மனங்களை வென்றது ஓவியாதான். 

பிக் பாஸ் முதல் பருவம் முடிவடைந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. எந்த பெரிய  இயக்குனர்களின் படங்களிலோ, அல்லது நடிகர்களின் படங்களிலோ ஓவியா நடிக்கவில்லை. ஆனால் இடைவெளியே இல்லாமல் தொடர் நிகழ்ச்சிகள்.

முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துகிறார் ஓவியா. படங்களில் நடிப்பதைவிட இதுல மகிழ்ச்சியாக இயங்க முடிவதாக உணர்கிறாராம் ஓவியா. சில மாதங்களுக்கு முன் ஜாக்குவார் காரும் வாங்கியிருக்கிறார் ஓவியா.

ஜாக்குவார் காரின் விலை என்ன தெரியுமா? அறுபது இலட்சம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,916.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.