Show all

அப்பா மகள் சொத்து தகராறு! நடிகர் விஜயகுமாருக்கும், நடிகை வனிதாவிற்கும்

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை திரைப்பட படப்பிடிப்பிற்காக வாடகைக்கு வழங்குவது வழக்கமானது. அதுபோல அவரது மகள் வனிதாவிற்கு படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டதாக தெரிகிறது. 

குறிப்பிட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னரும் வனிதா வீட்டை காலி செய்யவில்லை. இது குறித்து விஜயகுமார் தரப்பு அவரிடம் கேட்ட போது இது எனது சொத்து, வீட்டை காலி செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், வேறுவழியின்றி நடிகர் விஜயகுமார், தனது வீட்டில் வசிக்கும் மகள் வனிதா, வீட்டை காலி செய்யாமல் சொந்தம் கொண்டாடுவதாகவும், அவரை வீட்டில் இருந்து காலி செய்து தர வேண்டும் எனவும் புகார் மனு அளித்தார். 

இதனால், செய்தியாளர்கள் இது குறித்து செய்தி சேகரிக்க ஆலப்பாக்கத்தின் வீட்டிற்கு சென்றனர். அப்போது வனிதா செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,916.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.