Show all

படத்திற்கு ஆறு கோடி கேட்கும் நயன்தாரா!

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழில் முதல் இடத்து நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு தமிழ் திரைப்படத்தில் மட்டும் அல்லாமல், தெலுங்கிலும் அவர் நடிக்கும் படத்திற்கு முதன்மையான சந்தை உள்ளது. இவரது படங்கள் பெரிய நடிகர்களின் படங்களுக்கு நிகராக வசூலை வாரி குவிக்கின்றன. இதனால் இவரை தேடி பல இயக்குனர்கள் குவிந்து வருகிறார்கள். இவரது சம்பளம் கடந்த ஆண்டு ஒரு படத்திற்கு 4 கோடியாக இருந்தது.

தற்போதைய நிலையில் தன்னை வைத்து படம் எடுப்பவர்கள் அதிக லாபத்தை பார்ப்பதால் நயன்தாராவின் சம்பளம் தற்போது 6 கோடியாக உயர்ந்துவிட்டது என நயன்தாராவின்  மேலாளர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,054.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.