Show all

தடைகடந்து தீபாவளியன்றே வெளியாகிறது மெர்சல்

இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அட்லீ இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. பல தடைகளைத் தாண்டி படம் வெளியாக உள்ளது.

மெர்சல் படம் வெளியான அன்றே இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது படம் வெளியான மூன்று நாட்கள் வரை இணையதளத்தில் வெளியிட மாட்டோம் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளது.

மெர்சல் படத்திற்கான சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது. படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு சீட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். தளபதி தீபாவளியை கொண்டாட ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.