Show all

குந்தவை ஒப்பனையில், குழந்தை நட்சத்திரம் லிசாக்குட்டி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா என்கிற தொடரில் முதன்மை வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் லிசாக்குட்டி குந்தவி போல் ஒப்பனை செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் பேரளவாக விருப்பங்களையும், பகிர்வுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் பதினோரு நாட்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. 500 கோடி பொருட் செலவில் லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து தயாரித்துள்ளது.

பல மொழிகளில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படம்- திரைப்பேரறிமுகங்களும், மக்களும் எதிர்பார்த்தது போலவே சிறந்த வரவேற்புடன் வணிகச்சாதனை புரிந்து வருகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிசா, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி போன்ற பல பேரறிமுகங்களும் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

இதில் படத்திற்கு மிகவும் வலு சேர்க்கும் வகையில் குந்தவி வேடத்தில் நடிகை திரிசா நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் திரிசா மிக அழகாக தோற்றமளித்துள்ளார் மற்றும் சிறப்பாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் இருக்கும் பல நடிகைகளும் குந்தவி வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டிருந்தனர்.

ஆனால் அந்த வாய்ப்பு திரிசாவுக்குத்தான் கிடைத்தது. இந்த நிலையில் குந்தவி வேடத்தில் திரிசா நடித்ததற்கு ஒரு பக்கம் பலரும் வாழ்த்து கூறி வருகின்ற நிலையில் மறுபக்கம் சிலர் குந்தவி போலவே உடை மற்றும் நகை அலங்காரம் செய்து படமெடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அது போல் தற்போது- ஓர் இதயமருத்துவரை, வெண்பா என்கிற ஒரு பெண்ணின் தவறான வழிகாட்டுதலில், மனநோயாளியாகக் காட்சிப்படுத்தும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா என்கிற தொடரில் முதன்மை வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் லிசாக்குட்டி குந்தவி போல் ஒப்பனை செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் பேரளவாக விருப்பங்களையும், பகிர்வுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,398.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.