Show all

உலகிலேயே சிறந்த நாணயமாகக் கொண்டாடப்படுகிறது பாகிஸ்தான் ரூபாய்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு மட்டும் அல்லாமல், அனைத்து முதன்மை நாணயங்களின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த பதினோரு நாட்களாக பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 3.6 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.

24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு மட்டும் அல்லாமல் அனைத்து முதன்மை நாணயங்களின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் பல ஆண்டு உச்சத்தில் இருக்கிறது.   

இந்த நிலையில்தாம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் உலகிலேயே சிறந்து விளங்கும் நாணயம் என்ற அங்கீகாரத்தையும் பாகிஸ்தான் ரூபாய் பெற்றுள்ளது. 

கடந்த வெள்ளிக் கிழமையுடன் உடன் முடிந்த கிழமையில் உலகளவில் பெரும்பாலான நாணயங்களின் மதிப்பு சரிந்த நிலையில், பன்னாட்டு நாணய நிதியத்தின் நிதியுதவி பெற்றும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு இருக்கும் பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் உலகிலேயே சிறந்து விளங்கும் நாணயம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 

கடந்த வெள்ளிக் கிழமையுடன் உடன் முடிந்த கிழமையில் பாகிஸ்தான் நாட்டின் ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. அமெரிக்க டலருக்கு 240.76  பாகிஸ்தான் ரூபாய் செலுத்த வேண்டியிருந்த நிலையில் 217.29 செலுத்தினால் போதும் என்கிற அளவிற்கு பாகிஸ்தான் ரூபாயின் பணமதிப்பு உயர்ந்துள்ளது.

இந்தத் திடீர் உயர்வு அதிகப்படியான அன்னிய முதலீடுகள் குவிந்த காரணத்தால் ஏற்பட்டது எனத் தெரிய வந்துள்ளது.   நவாஸ் கட்சியின் தலைவர் இசாக்தார் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் வந்த பின்பும் அன்னிய முதலீட்டிலும், ரூபாய் மதிப்பு வளர்ச்சியிலும் எவ்விதமான மாற்றமும் இல்லாதிருந்தபோதும் தற்போது 11 நாட்களாகப் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இசாக்தார் நியமனத்திற்குப் பின்பு அமெரிக்க டாலருக்கு எதிராக பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் பழைய கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,398.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.