Show all

தனது அரசியல் பயணத்தில் இந்தியன்-2 ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதாகத் தெரிவிக்கிறார் கமல்

18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 வருகிற வெள்ளிக் கிழமை திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடத் திட்டமிட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. 

படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஐதராபாத்தில் படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது. 

இந்த நிலையில், அரசியல் குறித்தும் திரைப்பட குறித்துமான கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்து பேசினார். இந்தியன்-2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்று கேட்டபோது,

'இந்தியன் படத்துக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே நான் விரும்பினேன். அதை இயக்குனர் சங்கரிடமும் வெளிப்படுத்தினேன். ஆனால் சங்கருக்கு தயக்கம் இருந்தது. வெற்றி பெற்ற படத்தை எதற்காக மாற்றி எடுக்க வேண்டும் என்று யோசித்தார். 

நான் அவரிடம், நீங்கள் இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்கவில்லை என்றால் அந்தத் தலைப்பை என்னிடம் தந்து விடுங்கள் நான் எடுக்கிறேன் என்று கூறினேன். அதன்பிறகு அண்மை காலமாக அரசியல் சம்பந்தமாக நான் பதிவிடும் கருத்துக்களை பார்த்த பிறகு இந்தியன்-2 படத்தை எடுக்கலாம் என்று அவருக்கு எண்ணம் ஏற்பட்டது. 

என்னுடையை அரசியல் பயணம் என்ற புள்ளியில், இருவரும் ஒன்று சேர்ந்து இந்தப் படத்தை எடுக்கத் தயாராகி உள்ளோம். அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதை மனதில் வைத்தே இந்த படத்தில் நடிக்கிறேன்.' என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,868.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.