Show all

முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் பட நாயகரான ரோஜர் மூர் மறைந்தார்

பிரபலமான நடிகரும் முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் பட நாயகருமான ரோஜர் மூர் இன்று காலமானார். இவருடைய வயது 89. புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரோஜர் மூர் சில கால போராட்டத்திற்குப் பின்னர் இன்று மரணத்தைத் தழுவினார். 1973 ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். மேலும் பல பொதுச் சேவையிலும் அதிக ஈடுபாடு உடையவர். 

ரோஜர் மூர் இங்கிலாந்து அரசின் சர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்டபஸ்ஸி, தி மேன் வித் தி கோல்டன் கன், ஏ வியூ டு ஏ கில், பார் யுவர் ஐஸ் ஒன்லி, தி ஸ்பை ஹூ லவ்ட் மீ, மூன்ரேக்கர் மற்றும் பார் யுவர் ஐஸ் ஒன்லி என ஏழு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார். அதிக அளவிலான ஜேம்ஸ் வேடத்தில் நடித்த ஒரே நடிகரும் ரோஜர் மூர்தான். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.