Show all

நீர்தானா அந்தக் குயில்! பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருமண நாளன்று தனது கணவரின் புகைப்படம் பகிர்ந்துள்ளார்

16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொஞ்சம் கூட வெட்கமோ, சூடு சொரணையோ, இல்லாமல் அன்றாடம் வழியவந்து ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லி, இணைய ஆர்வலர்களிடமும் பொது மக்களிடமும் வாங்கி வாங்கி கட்டிக் கொண்டிருக்கிற மாபெரும் தலைவர் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மட்டுமே.

ஆனால், தமிழிசையின் பின்னால் உள்ள சௌந்தரராஜன் என்ற அவரின் கணவர் எப்படி இருப்பார் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. தமிழிசை அண்மையில் தனது திருமண நாளையொட்டி வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கீச்சு பதிவிட்டிருந்தார். அதில்தான், கணவர் நிழல்படத்தை பகிர்ந்திருந்தார்.

இதுவரை, தமிழிசை கணவர் சௌந்தரராஜன், புகைப்படத்தை பகிர்ந்தது இல்லை. மகப்பேறு மருத்துவர் என்று சொல்லப் படுகிற தமிழிசை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.பட்டமும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டி.ஜி.ஓ. பட்டமும், கனடாவில் மருத்துவப் பயிற்சியும் பெற்றவராம். இவரது கணவர் மருத்துவர் சௌந்தரராஜன், சென்னையில் பிரபல மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறாராம். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர்கள் இருவரும் கூட மருத்துவர்கள்தாமாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,959.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.