Show all

நள்ளிரவில் தெருவில் குவிந்த ரசிகர் பட்டாளம்! ஹிந்தி திரையுலக நடிகர் ஷாருக்கான் பிறந்தநாளுக்காம்

16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹிந்தி படவுலக நடிகர் ஷாருக்கான் இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலே அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவியத் தொடங்கினர்

ஷாருக்கான் தற்போது நடித்து வரும் ஜீரோ உள்ளிட்ட இரண்டு படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஷாருக்கானுக்கு ஹிந்தி படவுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் உள்ள மன்னாட் பகுதியில் வசித்து வரும் ஷாருக்கான் வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கிலான ரசிகர்கள் குவிய தொடங்கினர்.

ரசிகர்கள் கூடியதை அறிந்த ஷாருக்கான், தனது வீட்டின் பால்கனிக்கு வந்து நின்றார். அங்கிருந்து தனது ரசிகர்களை பார்த்துக் கையசைத்து வாழ்த்து பெற்றார். இதனால் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. 

நம்ம ஊரிலே மட்டும் திரைத்துறையினருக்கு கூட்டம் கூடுகிற மாதிரி திட்டறீங்களேப்பா ; எல்லா ஊரும் அப்படித்தாம்பா இருக்கு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,959.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.