Show all

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே! சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்பட, இணையத் திருட்டுக்கு தடை

25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதிய முயற்சியாக, இணையத் திருட்டுக்கு உயர் அறங்கூற்று மன்ற தடையோடு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சமந்தா நடித்து வெளியாகும் படம் சீமராஜா. 

இத்திரைப்படம் வரும் வியாழக் கிழமை வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்புள்ளதாகவும், அப்படி படத்தை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட்டால் பெரிய இழப்பு ஏற்படும். இது தங்களது திரையுலக வாழ்க்கையையே பாதிக்கும் என்பதால், சட்ட விரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி படத் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தில் மனு பதிகை செய்தார். 

இந்த மனுவை விசாரித்த அறங்கூற்றுவர் சுந்தர், இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,906.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.