Show all

விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி! தொடர் தோல்விகளைக் கொடுத்த ரஜினியின் படங்கள்

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ரஜினி நடிப்பில் பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் வெளியாகி வசூலை வாரிக் குவித்தன.

இந்த இரண்டு படங்களுக்கிடையே வசூலில் கடுமையான போட்டி நிலவியது. தமிழகத்தில் பேட்ட படம் அதிக வசூல் செய்திருந்தாலும், உலகளவில் ஒட்டுமொத்தமாக விஸ்வாசம் அதிக வசூலை பெற்றதாக கூறப்படுகிறது. 

இப்படி இருக்க பேட்ட திரைப்படம் உலகளவில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து வசூல் சாதனை படைத்திருந்தாலும், தெலுங்கில் இந்த படம் தோல்வியை தழுவியுள்ளதாக கூறப்படுகிறது. 

தெலுங்கில் 14 கோடிக்கு விற்பனையான இந்த படம் 6 கோடியை மட்டும் வசூல் செய்துள்ளதாக தெலுங்கு பட விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தெலுங்கு உரிமை வாங்கிய விநியோகஸ்தர்கள் கவலையில் உள்ளனர்.

காலா, 2.0 படங்களைத் தொடர்ந்து பேட்ட படமும் தோல்வியை தழுவியிள்ளது என திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,058.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.