Show all

பெங்களூரில் பன்னாட்டு உறவுகள் குறித்து பேச! திஹிந்து இதழின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டார்; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திஹிந்து எனும் பிரபல ஆங்கில நாளிதழ் பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டு உறவுகள் குறித்த கருத்தரங்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்ற இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திஹிந்து  இதழின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டார். 

அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த ஆறு மாதத்தில் ராஜபக்சேவின்  இரண்டாவது இந்தியப் பயணம் இதுவாகும். இலங்கையில் ராஜபக்சே மைத்திரிபால சிறிசேனா கூட்டு அடாவடி பிரச்சனைகள்;, உச்ச அறங்கூற்றுமன்ற தலையீட்டில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட   பிறகு, முதல் முறையாக ராஜ பக்சே வரும் இந்தியப் பயணம் இதுவாகும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,058.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.