Show all

விரைவில் திரைக்கு வரவிருக்கிறது தனுஷின் ‘வடசென்னை’

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘வடசென்னை. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தனுஷே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் படபிடிப்பு தொடங்கி வெகு நாட்களாகி விட்டன. இடையில் ஆங்கில படத்தில் கூட நடித்துவிட்டு வந்தார் தனுஷ். அதன்பிறகு வேகவேகமாக நடைபெற்ற படபிடிப்பு, இறுதிக்கட்டத்துக்கு வந்திருக்கிறது. இன்னும் 3 வாரங்களே படபிடிப்பு, பாக்கியிருக்கிறதாம். அதன்பிறகு, பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி 2’ படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,629

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.