Show all

முதல்பார்வை சுவரொட்டி மீதான இணைய சர்ச்சையை முடித்து வைத்தார் சந்தானம்! விரைவில் வெளிவர இருக்கிறது டகல்டி படம்.

விஜய்யின் சர்கார் பட சுவரொட்டி மாதிரியே, டகால்டி, படத்தின் முதல்பார்வை சுவரொட்டியில், சந்தானம் புகை பிடித்திருப்பது போன்ற காட்சி இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், வருத்தம் தெரிவித்து உடனடியாக சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தார் சந்தானம்.

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சங்கரின் உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கியுள்ள புதிய படம் டகால்டி. இந்தப் படத்தில் சந்தானம் கதைத்தலைவனாக நடிக்க, மேற்கு வங்கத்தை சேர்ந்த ரித்திகா சென் கதைத் தலைவியாக அறிமுகமாகிறார். டகால்டி படத்தின் முதல் பார்வை சுவரொட்டிகள் முந்தா நாள் வெளியாகி, இந்திய அளவில் தலைப்பானது. 

டகால்டி, படத்தின் முதல்பார்வை சுவரொட்டியில், சந்தானம் புகை பிடித்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றது தொடர்பாக, விஜய்யின் சர்கார் பட சுவரொட்டி மாதிரியே, டகால்டி சுவரொட்டி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். 

அதேபோல், சர்கார் பட சுவரொட்டி சந்தித்த அதே பிரச்சினையை டகால்டி சுவரொட்டியும் சந்தித்தது. டகால்டி சுவரொட்டிக்கு நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் இதுகுறித்து தனது கீச்சுப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள சந்தானம், டகால்டி பட சுவரொட்டி கவனக்குறைவாக பதிவேற்றப்பட்டுவிட்டது. உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகைப்பழக்கத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சுவரொட்டி அமைந்து இருக்கிறது என்பதை தான் உணர்ந்துவிட்டதாகவும், இனி வரும் காலங்களில் தனது படங்களில் இது போன்ற முன்னெடுப்புகன் உறுதியாக நிகழாது எனவும் அவர் கூறியுள்ளார். 

சந்தானத்தின் இந்த விளக்கத்தை அவரது ரசிகர்கள் ஏற்றுள்ளனர். புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள், மாம்பழம் சாப்பிடுங்கள் என டகால்டி சுவரொட்டியில் ஒட்டு வேலை செய்து ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். 

டகால்டி முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இல்லாமல், சந்தானத்தின் பிற படங்களில் இருந்து கொஞ்சம் வேறுபாடாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தங்கி விட்ட தமிழ் பையனாக சந்தானம் நடித்துள்ளார் என்று இயக்குனர் விஜய் ஆனந்த் கூறியுள்ளார். இந்தப் படத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் விரைவில் வெளியீடு செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,178.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.