Show all

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போவது யார்! கமல் கொரோனா சிகிச்சை காலக்கட்டத்தில்

கமல் கொரோனா குறுவித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சிகிச்சை காலக்கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இந்த நடிகரா? என்று முன்மொழியப்படும் தகவல், வதந்தியும் ஆகி;ப் போகலாம். ஆனாலும் இரண்டொரு நாளில் விடை தொரிந்துவிடும்.

06,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகர் கமல்காசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விக்ரம் படத்தில் கமலுடன் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி கமல் கொரோனா சிகிச்சை காலக்கட்டத்தில் தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த நான்கு பருவங்களைத் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்காசன்தான் இந்தப் பருவ பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி கிழமை இறுதி நாட்களில் பிக்பாஸ் இல்லப் போட்டியாளர்களைச் சந்தித்து கிழமை முழுக்க நடந்த நிகழ்வுகளை விவாதித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், கடந்த கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கு தனது கதர் துகிலை அறிமுகப்படுத்திய நடிகர் கமல்காசன் அடுத்த ஓரிரு நாட்களிலேயே திரும்பினார். அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல்காசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

கமல்காசன் பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை படம்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் இருமலால் பாதிக்கப்பட்ட நடிகர் கமல்காசன் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனைதத் தொடர்ந்து சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்காசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு லேசான காய்ச்சலும், மூச்சுப் பாதையில் தொற்றும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதன் காரணமாக அடுத்த இரண்டு கிழமைகளுக்கு நடிகர் கமல்காசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை வரும் கிழமைகளில் யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

வரும்கிழமைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது. கமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெறுவது ஐயம் என கூறப்படுகிறது. இதனால் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஓய்வு கிடைக்கும் பட்சத்தில் அவர் தொகுத்து வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் சேதுபதியால் நேரம் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டால் நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் பருவம் 5 நிகழ்ச்சியை சிம்புதான் தொகுத்து வழங்குவார் என பிக்பாஸ் பருவம் 4 முடிந்ததுமே தகவல் பரவியது. ஆனால் கடைசியில் அது வதந்தி என்றும் பிக்பாஸ் பருவம் 5 நிகழ்ச்சியை கமல்தான் தொகுத்து வழங்குவார் என்றும் உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் அடுத்த பருவங்களுக்கு ஒத்திகையாக கமல் வரும் வரை தற்காலிகமாக சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் யார் இந்தக் கிழமை தொகுத்து வழங்கப்போகிறார் என்பது குறித்த அதிகாரப்பாட்டுத் தகவல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,075.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.