Show all

பாஸ்கர் தி ராஸ்கல் தமிழ் மொழிமாற்றப் படத்தில் ரஜினி நடிக்கிறார்

சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான,

பாஸ்கர் தி ராஸ்கல் தமிழ் மொழிமாற்றப் படத்தில் ரஜினி நடிக்கிறார்.

இரஞ்சித் இயக்கத்தில் கபாலி, ஷங்கர் இயக்கத்தில், எந்திரன்-2 என ஒரே நேரத்தில் இரு படங்களில் ரஜினி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து, மலையாள பாஸ்கர் தி ராஸ்கல் தமிழ் மொழிமாற்றப் படத்தில் ரஜினி நடிக்கிறார். இந்தத் தகவலை இயக்குனர் சித்திக் உறுதி செய்துள்ளார்.

 

மம்முட்டி, நயன்தாரா நடித்திருந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில், இருவருமே தலா ஒரு குழந்தைகளுக்கு தந்தை மற்றும் தாயாக நடித்திருந்தனர்.

 

தங்கள் குழந்தைகளின் மூலம் இவர்கள் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பது படத்தின் கதை. நயன்தாராவின் பிளாஷ்பேக் கொஞ்சம் த்ரில் கலந்த ஆக்ஷனை படத்துக்கு தந்திருந்தது.

 

இதன் ரீமேக்கில் நடிக்க ரஜினி சம்மதம் தெரிவித்திருப்பதாக சித்திக் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.