Show all

இன்று விளக்குகிறார் பாரதிராஜா: கமலை தேர்வு செய்தது ஏன்! 16 வயதினிலே படத்தில் சப்பானி வேடத்தில் நடிக்க

27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாரதிராஜா இயக்கத்தில் கமல்காசன், ரஜினி, சிரிதேவி மூவரும் நடித்த தலையாயத்துவமான வரலாற்றைத் திருப்பிப் போட்ட படம் 16வயதினிலே. இப்படத்தில் கமல்காசனின் சப்பானி  வேடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மரகதக்காடு என்ற படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாரதிராஜா, மரகதக்காடு படத்தின் நடிகர்களைப் படத்தில் பார்க்கும்போது ஒரு விசயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி வேடத்தில் நடிக்க தேர்வு செய்ததேன். அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும் போது தான் மக்களுக்கு அது பிடிக்கிறது.

இதே நாகேசைப் போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். கருப்பு வெள்ளையில் படத்தை எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேசைத்தான் சப்பாணியாக நடிக்க  வைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை வண்ணத்தில் எடுத்ததால் கமலை தேர்வு செய்தேன் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,908.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.