Show all

மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனமாடிய மாணவிகள்! உதகையில் குறிஞ்சித் திருவிழாக் கொண்டாட்டம்

27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீலகிரி மாவட்டம் உதகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்களை கொண்டாடும் விதமாக முதன்முறையாக குறிஞ்சி திருவிழா நடைபெற்றது. நீலகிரியின் வரலாற்றிலேயே குறிஞ்சி திருவிழா முதன்முறையாக கல்லட்டி மலையடிவாரத்தில் கொண்டாடப்பட்டது. ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் நீலகிரி மாவட்ட மலைவாழ் மக்களின் பண்டைய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தக் குறிஞ்சி மலரகள் கல்லட்டி, சின்ன குன்னூர், தேனாடு, கொடநாடு பகுதிகளில் காட்சியளிக்கிறது. குறிஞ்சி விழாவில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன், அரசு அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,908.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.