Show all

பகடிக்கு உள்ளாகியுள்ள பாரதி கண்ணம்மா, ராஜாராணி 2! இரண்டு தொடர்களிலும் கூரைமின் விசிறி கழண்டு விழுகிறது

பாரதி கண்ணம்மா தொடரில் சுழன்று கொண்டிருக்கும் கூரைவிசிறி கீழே விழுவது போன்ற காட்சிகள் இரண்டு முறை வைக்கப்பட்டிருந்தது. தற்போது ராஜாராணி 2லும் முன்னெடுக்கப்பட்டது, சமூகவலைதளங்களில் கடுமையாகப் பகடிக்குள்ளாகியுள்ளது.

08,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் தொடரான பாரதி கண்ணம்மாவில் வருகிற பாரதி-  உலகில் எந்த மூலையில் தேடினாலும் கிடைக்க வாய்ப்பே இல்லாத, அந்த நாடகத்தின் அதிமேதவி இயக்குனர் மூளையில் மட்டும் உதித்த ஒரு கற்பனையான உருவாக்கம் ஆகும். 

இரண்டு நாட்களுக்கு முன்னால் அப்பாவுக்கும் மகனுக்கும் நடந்த, தங்கள் தங்கள் மனைவி குறித்த உரையாடலின் அவ்வளவு ஆழமான உயிரோட்டத்தை, நாம்மால் பாராட்ட முடியவில்;;லை. ஏனென்றால் அடுத்த அத்தியாயத்திலேயே பாரதி நத்தை மாதிரி தன்னை சந்தேகக் கூட்டுக்குள் குறுக்கிக் கொண்டுவிடுவார்.

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை தொடர்கள் விளங்குகின்றன. இதனால் ஒவ்வொரு காட்சிமடையும் தங்கள் காட்சிமடையின் இலக்கு அளவீட்டுப் புள்ளிக்காக இது வெற்றிக்கானதாக அமையுமா? அது வெற்றிக்கானதாக அமையுமோ என்று எதையெதையோ காட்சிப்படுத்திக் கொண்டுள்ளன. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் சமூக வலைத்தளங்களில் படுபயங்கரமாக பகடியாடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பாரதிகண்ணம்மா தொடரில் ஒரே ஒரு விடையத்தை மட்டும் வைத்துக்கொண்டு பல ஆண்டு காலமாக இயக்குனர் விதவிதமாக தொடரை ஓட்டிக்கொண்டு வருகிறார் என்று பார்வையாளர்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். 

அதே வரிசையில் அண்மைக் காலமாக அதிகமாக முத்தழகு தொடர் பகடியாடப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது ராஜா ராணி 2 தொடரும் சிக்கி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடர் முழுக்க முழுக்க வட இந்தியக் கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது.

இந்த நிலையில் தற்போது ராஜா ராணி 2 தொடரும் படுபயங்கரமாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. சில தொடரில் இருக்கும் அதே காட்சிகள் கூறியது கூறல் முறையில் மற்ற தொடர்களிலும் தொடர்கின்றன. அந்த வகையில் பாரதி கண்ணம்மா தொடரில் சுழன்று கொண்டிருக்கும் கூரைவிசிறி கீழே விழுவது போன்ற காட்சிகள் இரண்டு முறை வைக்கப்பட்டிருந்தது. 

சுழன்று கொண்டிருக்கும் கூரைவிசிறி கீழே விழுவது போன்ற அதே காட்சி ராஜா ராணி 2 தொடரில்  ஒளிபரப்பானது. இதைப்பார்த்த, சமூக வலைதள ஆர்வலர்கள் கடுமையாக கிண்டல் அடிக்கின்றனர். 

கூரை மின்விசிறியைப் பார்த்தாலே நம்ம வீட்டிலும் விழுந்து விடுமோ என்கிற பீதியை மக்களுக்கு உருவாக்குவது போல இருக்கிறது. ஒவ்வொரு தொடரிலும் தொடரும் இந்தக் காட்சிகள். கூரை மின்விசிறியைப் பொருத்தும் திருகும் மரையும் கழன்டு போனால்தான் இந்த நிலை ஏற்படும். இதைப் பார்க்கும் போது மின்விசிறி தயாரிப்புத் துறையில் இருப்பவர்களுக்கும் கோபம் வரும். மின்பணி அமைப்பு வேலைகள் செய்கிறவர்களுக்கும் கோபம் வரும். 

மின்விசிறியில் மரை கழன்டு கீழே விழுவதற்கு வாய்ப்பேயில்லை. இயக்குனரின் மரைதான் கழன்டிருக்கும் என்று கிண்டலடிக்கின்றனர், துறை சார்ந்த சமூகவலைதள ஆர்வலர்கள்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,225.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.