Show all

தயாரிப்பாளர்களாக காசை விட்டு நொந்து நூடுல்சாகி நிற்கிறார்கள்! கதைத்தலைவர்களாக காசு கொழித்த பல இளம் கதைத் தலைவர்கள்

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரைத்துறையில், இளம் கதைத் தலைவர்களுக்கு ஒருசில படங்கள் வெற்றி பெற்றாலே சொந்த படம் தயாரிக்கும் ஆசை வந்துவிடுகிறது. ஆனால் அப்படி சொந்த படத்தில் காலடி வைப்பவர்கள் சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் தயாரிப்பதால் படங்கள் தோல்வி அடைந்து நட்டத்துக்குள்ளாகிறார்கள். 

அண்மையில் அதர்வா நடித்து தயாரித்த செம போத ஆகாதே படம் தோல்வி அடைந்தது. இனி தயாரிப்பில் ஈடுபடவே மாட்டேன் என்று அதர்வா கூறிவிட்டார்.

ஆர்யா தயாரித்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடம்பன் ஆகிய படங்கள் சரியாக போகாததால் அவர் தயாரிப்பை சிலகாலம் ஒதுக்கி வைத்து இருக்கிறார். விஜய்சேதுபதி தயாரித்து அண்மையில் வெளியான ஜுங்கா படத்தாலும் இழப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விசால் தயாரித்து நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தன. இரும்புத்திரை படம் தான் காப்பாற்றியது. 

தனுஷ் தயாரித்த அம்மா கணக்கு, படம் பெரிதாக போகவில்லை. 

விஜய் ஆண்டனிக்கும் சில படங்கள் அடி. எனவே கதைத்தலைவர்கள் தயாரிப்பில் இறங்குவதற்கு யோசிக்கிறார்கள்.

மூத்த தயாரிப்பாளர் ஒருவர்: 'நடிப்பதற்கு கதை கேட்பது என்பது வேறு. தயாரிப்புக்கு கதை கேட்பது என்பது வேறு. சரியான கதைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே வெல்ல முடியும். நட்பு பார்த்து படங்கள் கொடுத்தால் இழப்பை தான் சந்திக்க நேரிடும்' என்று எச்சரிக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,872.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.