Show all

அனுபமா பரமேஸ்வரன்! கீச்சுப் பக்கத்தில் பத்துஇலக்கம் பேர்கள் தன்னைப் பின்தொடரும் மகிழ்வில்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மலையாளத்தில் வாகை சூடிய படம் பிரேமம். அங்கு மட்டுமில்லாமல் தமிழில் இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படத்தில் பள்ளிக்கு செல்லும் பெண்ணாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது.

மலையாள நடிகையான இவர் தனுஷ்க்கு ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தார். இப்படத்திலும் துறுதுறுவென, கறிக்கோழி முட்டைகளை வண்ணம் தீட்டி நாட்டுக் கோழி முட்டையென விற்கும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இவர் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய படத்தின் செய்திகள், புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். தற்போது இவரது கீச்சு  பக்கத்தில் இவரை பின் தொடர்பவரின் எண்ணிக்கை பத்து இலக்கத்தைத் தொட்டிருக்கிறது. இவ்வளவு ரசிகர்கள் தன்னை பின் தொடர்கிறார்களா என்று மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,728.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.