Show all

கொஞ்ச இடைவெளிக்குப் பிறகு ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன் வருகிறார்

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாரதி கண்ணம்மா, படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். அதை தொடர்ந்து சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப் ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் சேரன், 'வீட்டிற்கு வரும் திரை' என்ற புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார். 

அதன் மூலம் திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டார். அதன்படி அவர் இயக்கிய ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை வெளியிட்டார். ஆனால் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய படத்திற்கு 'ராஜாவுக்கு செக்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தை சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். தற்போது இப்படத்தின் சுவரொட்டி வெளியாகி இருக்கிறது. இந்த சுவரொட்டி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,764. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.