Show all

ஏன் இந்த மனு தள்ளுபடி! அதிர வைத்த உச்ச அறங்கூற்றுமன்றம்

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எம்.எல் சர்மா என்ற வழக்கறிஞர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை பதிகை செய்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கு அளிக்கும் போது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூட மறுக்கின்றனர். உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இது தொடர்பாக நடுவண் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த பொதுநல மனு அறங்கூற்றுவர்கள் எஸ்.ஏ போப்டே, நாகேஸ்வர ராவ் அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கில் சர்மா நீங்கள் பாதிக்கப்பட்ட நபர் இல்லை. குற்றவியல் சம்பவத்தில் பொதுநல மனுவை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? என அறங்கூற்றுவர்கள் கேள்வி எழுப்பினர்.

'பல பாலியல் பலாத்கார சம்பவங்களில் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் தொடர்பு உள்ளது. ஆனால், காவல்துறையினர் எந்த முதல் தகவல்அறிக்கையும் பதிவு செய்யவில்லை. அதிகார தலையீடு அதில் இருக்கிறது' என வழக்கறிஞர் சர்மா வாதிட்டார்.

இதனைக் கேட்ட அறங்கூற்றுவர் போப்டே, 'அத்தனை பாலியல் பலாத்கார வழக்குகளிலும் நீங்கள் யார்?, உங்களது உறவினர்கள் பலாத்காரத்திற்கு ஆளாகி அவர்களுக்காக தீர்வு கேட்கிறீர்களா? அல்லது பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களாக உள்ளனரா?' என கேள்விகளை எழுப்பினர்.

அறங்கூற்றுவரின் கேள்வியால் மன்றத்தில் ஒரு சங்கடமான அமைதி நிலவியது. சர்மா தனது வாதங்களை தொடர முற்பட்ட போது, இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறங்கூற்றுவர்கள் அறிவித்தனர்.

நல்லவேளை அறங்கூற்றுமன்ற நேரத்தை வீணடித்தார் என்று வழக்கறிஞருக்கு ஏதும் அபராதம் விதிக்கவில்லை.

 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,763. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.