Show all

80 முறை தவறு திருத்தப் பட்ட ஒற்றைக்காட்சி! விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் படத்திற்கு பெயர் மிகச்சிறப்பு

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விஜய் சேதுபதி எந்த வேடத்தில் நடித்தாலும் அதில் மிக எதார்த்தமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது பல படங்களில் விஜய் சேதுபதி நடித்துவந்தாலும், அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது சூப்பர் டீலக்ஸ் என்று பெயரிடப் பட்டுள்ள படத்தைதானாம். சூப்பர் டீலக்ஸ் என்பதை தமிழில் 'மிகச்சிறப்பு' என்று அழகாக சுட்டியிருக்கலாம்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். படத்தில் திருநங்கையாக நடிக்க ஒரு காட்சிக்கு தவறு திருத்த 80 முறை  மாற்றி மாற்றி நடித்துக் காட்டினாராம் அவர்.

ஆரண்யகாண்டம் படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மிகச்சிறப்பு. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மிகச்சிறப்பு, படத்தைப் பார்த்த பின்பு அந்தப் படத்தில் தான் இடம்பெறாதது வருத்தமளிப்பதாக பிரபல வடக்கத்திய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி கதைத்தலைவன் பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அண்மையில் இந்தப் படத்தின் விளம்பரக் காணொளி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தநிலையில் படத்தைப் பார்த்த பிரபல வடக்கத்திய இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது கீச்சுப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், மிகச்சிறப்பு (சூப்பர் டீலக்ஸ்) படம் பார்த்தேன். கொண்டாடுவதற்கு படத்தில் நிறைய விசயங்கள் இருக்கின்றன. படத்தைப் பார்த்த நான் அந்தப் படத்தில் இடம்பெறவில்லையே என்று வருத்தப்பட வைத்துள்ளது. குமாரராஜா பயமற்ற, பல தந்திரங்களைக் கொண்ட இயக்குநர் என்று பாராட்டியுள்ளார்.

மிகச்சிறப்பு, படத்துக்கு தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். முன்னதாக இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுத அனுராக் காஷ்யப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கும் இந்தப் படம் இரண்டு கிழமைகளில் திரைக்கு வர இருக்கிறது. பார்த்து விட்டு மிகச்சிறப்பு, என்று சான்றளிப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,094.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.