Show all

சல்லிக்கட்டு போராட்டம் போல் நீட் தேர்வுக்கு மாணவர்கள் ஏன் போராடவில்லை?

வேறு ஒரு தளத்தில், சல்லிக்கட்டு போராட்டம் போல் நீட் தேர்வுக்கு மாணவர்கள் ஏன் போராடவில்லை? என்று கேட்டிருந்த வினாவிற்கு விடையாக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 

02,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5125. 
நீட் தேர்வில் தோற்கிற வரை நீட் தேர்வு வேண்டாம் என்கிற எண்ணம் கொண்டிருப்பவர்களை எண்ணிச்சொல்லி விடலாம் என்பதுதான் சிக்கல்.

தோற்றவர்கள் மட்டுமே தற்கொலை போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். தோற்றவர்கள் மட்டுமே தற்கொலை போராட்டம் நடத்துவது போராட்ட முறையோ, வெற்றிக்கான இலக்கோ அல்ல. 

கேள்வியாளர் உவமை ஆக்கியிருக்கிற சல்லிக்கட்டுக்கு தமிழ்மக்கள் முன்னெடுத்த உலக வரலாறு சந்திராத போராட்டம் 'வேண்டும்என்பதற்கான' மண்ணின் அடிப்படை சார்ந்த போராட்டம். நீட்டோ, அயல் திணிப்பை, 'வேண்டாம் என்று மறுப்பதற்கான' முரண்பாடு சார்ந்த பேராட்டம். 

வேண்டும் என்று கேட்கிறவனின் சிந்தனை- உடைமை குறித்தது. அதற்கு வலிவு அதிகம். வேண்டாம் என்று மறுக்கிறவனின் சிந்தனை உரிமை குறித்தது. அதில் போராடுகிறவனின் பாதி வலிமை எதிரிக்குப் போய்விடும். எனெனில் நீட் வேண்டாம் என்று மறுப்பனின் அடிப்படையும் நீட்டே ஆகும். ஒருவன் எதை மறுக்கிறானோ, அதுவே அவன் அடிப்படையாகிறது. மறுப்பனின் போராட்டம் அடிப்படையை செழுமைப்படுத்தவே உதவும் என்பதே வரலாறு.

நீட் தேர்வை மறுப்பதை உடைமை குறித்த சிந்தனையாக மாற்றினால் நீட்டை இல்லாமல் செய்ய முடியும். அதற்குநாம், நடப்பில், நமக்கு இருந்துகொண்டிருக்கிற கல்விஉரிமையை மறுத்து, கல்வியை நமது உடைமை ஆக்கிக் கொள்ள வேண்டும். அதாவது ஒன்றியப் பட்டியலில் இருக்கிற கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றினால் நீட் என்கிற தலைப்பே நமக்குத் தேவையில்லாமல் போய்விடும். அதற்காக நாம் போராடினால் சல்லிக்கட்டு போராட்டம் போல் நாம் வெற்றியை ஈட்ட முடியும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,710.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.