Show all

உலகத்தில் முதலில் தோன்றிய மொழி எது

உலகத்தில் முதலில் தோன்றிய மொழி எது? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. உலகில் முதலாவதாகத் தோன்றிய மொழிகள் இரண்டு என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை. 

13,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125. 

1. உலகத்தில் முதலாவதாகத் தோன்றிய மொழிகள் இரண்டு. ஒன்று தமிழ். இரண்டாவது மொழிக்கு பெயர் கண்டறிய இயலாவகைக்கு நிறைய மொழிகள் அதிலிருந்து திரிந்து நடப்பில் இருக்கின்றன.

2. பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியின் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்த இமய மலை அடிவாரத்தில் நிலவாழ் உயிரிகள் தோன்றக் காரணமாகின. புவியின் எழுபது விழுக்காட்டிற்கு மேலான மக்கள் இந்த வடக்கு அரைக் கோளத்தில்தான் வாழ்கின்றனர்.

3. தெற்கு அரைக்கோளப் பகுதியின் தட்ப வெப்பம் நீர்வாழ் உயிரிகள் தோன்றக் காரணமாகின.

4. இமயமலை அடிவாரத்தில் ஒருகோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் தோற்றம் பெற்றது.

5. இமயமலையின் வடபகுதி மக்களுக்குக் கிடைத்தது மிகப்பெரிய நிலப்பகுதியாகும்.

6. இமயமலையின் தெற்குப்பகுதி மக்களுக்குக் கிடைத்த நிலப்பகுதி நாவலந்தேயம் என்கிற சிறு பகுதியாகும். 

7. நாவலந்தேயத்தில் வாழ்ந்த இனப்பிரிவினர் முற்றாக தமிழர் ஆவர். இவர்கள் முதலாவதாக தோற்றுவித்த சைகை மொழியை நாடகத்தமிழ் என்று நிறுவினர். நாடகத்தமிழின் காலம் ஐம்பதினாயிரம் ஆண்டுகள் ஆகும்.

8. அடுத்து தோன்றுவிக்கப்பட்ட மொழி இசைத்தமிழ் எனப்பட்டது. இசைத்தமிழின் காலம் இருபதினாயிரம் ஆண்டுகள் ஆகும்.

9. மூன்றாவதாகத் தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் இயற்றமிழ் என்கிற எழுத்துநடை மற்றும் பேச்சு நடை மொழியாகும். 

10. இயற்றமிழ் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது. 

11. இயற்றமிழில் இரண்டு பெரும்பிரிவுகள் உண்டு. ஒன்று இயல்அறிவு (சயின்ஸ்) இரண்டு இயல்கணிப்பு.  

12. இமய மலைக்கு வடக்கே பயணித்தவர்களின் மொழிகள் எல்லாமே தங்கள் மொழியை அடிப்படையான கட்டமைப்புகளோடு வளர்ப்பதற்கு முன்னாலேயே அடுத்த மொழியைச் சந்திக்க வேண்டிய நிலை அம்மொழிகளுக்கு அமைந்தது. காரணம் உலகினர் எல்லோருமே ஆற்றங்கரையைத் தேடி நாடோடி வாழ்க்கை மேற்கொண்டவர்கள்தாம். ஆகவே உலக மொழிகள் அனைத்திற்கும் ஒன்றோறொன்றான தொடர்புகள் மிகுதியாகவே காணப்படும். 

13. தமிழ்மொழியோ சங்கம் கண்டு உறுதியான கட்டமைப்பில் வளரும் வரை பிறமொழிகள் இருப்பதை அறியாமலேயே தனித்து வளர்ந்து கொண்டிருந்தது. காரணம் தமிழர் முப்புறம் கடல் சூழ்ந்து நான்காவது புறம் உலகப் பெரும்மலை அமையப்பெற்ற நாவலந்தேயம் என்ற பெரும்பகுதியை கொண்டிருந்ததும், தமிழர் ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று தேடி அலையாமல், தாம் வாழ்ந்த நிலம் நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும் மேடாக இருந்தாலும், தாழ்வான பள்ளமாக இருந்தாலும் அதனை வாழுமிடமாக்கிக் கொள்ளும் இயல்பினராய் இருந்தனர் என்பதும் ஆகும்.

14. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்கிற தமிழர்தம் நிலப்பகுப்பும்-
நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. 
என்கிற புறநானூற்றுப் பாடலும் இதற்கான சான்றுகள்.

15. உலக இனங்கள் அனைத்திலுமே தமிழருக்கு மட்டுமே நாடு பிடித்து அடுத்த மண்ணில் தம்மக்களை குடியமர்த்தும்  எண்ணம் இருந்ததான வரலாறு இல்லை. இதனாலும் தமிழுக்கு அடுத்த மொழிக்கான தொடர்பு நீண்ட நெடுங்காலம் கிட்டாமலே போனது.

16. இதனால் உலகில் உள்ள அத்தனை ஆயிரம் மொழிகளிலும் தமிழ்மொழி ஒன்று மட்டுமே மிக நீண்ட காலம் எந்த அயல்மொழிகளின் தாக்கமும் இல்லாமல் வளர்ந்த மொழியாகும்.

17. நாவலந்தேய இந்தியாவின் வடபுலத்தில், பிரம்மணர்கள் வரவுக்குப் பிறகு பிரம்மணர்களால் பேச்சு வழக்காக மட்டும் கொண்டுவரப்பட்ட பாரசீக மொழியும் வடபுல நாவலந்தேய மக்களால் பேசப்பட்டு வந்த கொடுந்தமிழும் இணைந்து உருவான மொழியும் வடநாவலந்தேய மக்களிடம் பெருவழக்காக வளர்ந்த மொழியும் ஆகும் பிராகிருதம்.

18. பிராகிருதம் என்றால் பேரங்கீகாரம் என்று பொருள். அதில் பிரா என்பது தமிழில் பெரு என்று வழக்கப்படுகிற சொல்லின் சமஸ்கிருத திரிபு ஆகும்.

19. பிராகிருதம் என்கிற அந்தப் பெயர் அந்த மொழிக்கு அமைந்தது சமஸ்கிருத கட்டமைப்பிற்கு பின்னரே ஆகும். அதற்கு முன்னர் அந்த மொழிக்கு பெயர் வைக்கவேண்டிய கட்டாயம் எழவில்லை.

20. சமஸ்கிருதம் ஆண்கள் மற்றும் படிப்பாளிகளால் மட்டும் பேசவும் எழுதவும் உருவாக்கப்பட்ட மொழி.

21. பிராகிருதம் வடபுல நாவலந்தேய மக்களால் மட்டும் பெருவழக்காக பேசப்பட்டுமட்டும் வந்த மொழியாகும். சமஸ்கிருதம் பெண்கள் உள்ளிட்ட பலருக்கு தடைமொழியாக இருந்த காரணம் பற்றி பிராகிருத மொழியை பேரளவாக வளர்க்கும் முயற்சியில் பல்வேறு அணிகள் கிளம்பியதால் இன்று நடப்பில் உள்ள பல்வேறு வடஇந்திய மொழிகள் தோற்றம் பெற்றன.

22. பிராகிருத மொழி வடஇந்திய மொழிகளுக்கு எல்லாம் அடிப்படை மூல மொழியாகும். வட இந்திய மொழிகள் மேம்பாட்டில் பாரசீகம், அராபி, பாஷ்து, உருது, சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கும் தொடர்பு உண்டு.

23. பிராகிருத மொழிக்கு முதலாவதாக அமைந்த எழுத்து தமிழையொட்டி அமைக்கப்பட்டது ஆகும். அதற்கு தமிழின் முந்தைய வடிவம் முழுமையாகப் பயன்பட்டது. தமிழர்களை த்ரமிளா என்றும் தமிழைத் த்ராமி என்று அழைத்த பிரம்மணர்கள் தங்கள் முதலாவது எழுத்து வடிவத்திற்கு பிராமி என்று பெயர் சூட்டினர். தமிழ் (த்ராமி) எழுத்துக்களும் பிராமி எழுத்துக்களும் ஒன்றுதான். பிராமி எழுத்துக்கள், க நான்கும் ச நான்கும் ட நான்கும் த நான்கும் ப நான்கும் கூடுதலாகக் கொண்டிருக்கும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,689.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.